ADDED : பிப் 10, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, கோடை காலம் துவங்கும் முன்பே, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், அரூரில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையோரங்களில் கொட்டி விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மொரப்பூர், கம்பைநல்லுார், அனுமன்தீர்த்தம் மற்றும் திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை வாங்கி வந்து, கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்த வியாபாரிகள், அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால், தர்பூசணி விற்பனை ஜோராக நடப்பதாக கூறினர்.