ADDED : நவ 22, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி
தர்மபுரி, நவ. 21-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மீன்வளத்துறையின் சார்பில் நடந்த, உலக மீன்வள தினத்தில், மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசினார்.
தொடர்ந்து, மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் மீனவர்களுக்கு தொழில் முதலீட்டிற்கான விவசாய கடனுதவி மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரண உதவித்தொகை என, 3.85 லட்சம் ரூபாய் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில், மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியன், மீன்வள உதவி இயக்குனர் கோகுலரமணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.