ADDED : நவ 07, 2024 01:22 AM
ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 7---
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்துார் அடுத்த நல்லகுட்லஹள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,-- கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.
முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, மக்கள் நல்வாழ்வு, மகளிர் திட்டம், சமூக நலம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இத்துறைகளின் மூலம், 187 பயனாளிகளுக்கு, 1.03 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை, கலெக்டர் சாந்தி வழங்கி பேசினார். முகாமில், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.