/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொம்மிடியில் கஞ்சா விற்ற மேற்கு வங்க தொழிலாளி கைது
/
பொம்மிடியில் கஞ்சா விற்ற மேற்கு வங்க தொழிலாளி கைது
பொம்மிடியில் கஞ்சா விற்ற மேற்கு வங்க தொழிலாளி கைது
பொம்மிடியில் கஞ்சா விற்ற மேற்கு வங்க தொழிலாளி கைது
ADDED : ஆக 22, 2025 01:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாரப்பன் உள்ளிட்ட போலீசார், நேற்று பொம்மிடி - ராமமூர்த்தி நகர் செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்தவர், போலீசாரை கண்டதும் ஓடினார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம், காசிபாரா அடுத்த ராம்சந்த்ராபூரை சேர்ந்த பாபுலால் மண்டல், 34, என்பதும், அவர் கேரளாவில் எலக்ரீஷியன் பணி செய்து வருவதும், ரயிலில் வந்தவர், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் பையில் வைத்திருந்த, 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து
விசாரித்து வருகின்றனர்.