ADDED : மே 08, 2026 07:23 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, பரவலாக கன மழை பெய்தது.
தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தர்மபுரியில், 25 மி.மீ., பாலக்கோடு, 51, பென்னாகரம், 22, நல்லம்பள்ளி, 1.50 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 99.50 மி.மீ., சராசரியாக, 11 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.
