/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை
/
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை
ADDED : அக் 20, 2024 01:09 AM
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று
அதிகாலை முதல் பரவலாக மழை
தர்மபுரி, அக். 20-
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 3 நாட்களாக ஆங்காங்கே, மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வட கிழக்கு பருவ மழை மற்றும் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதில், கடந்த, 15 முதல், தர்மபுரி மாவட்டத்தில், ஆங்காங்கே, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி நிலவரபடி தர்மபுரி, 30, பாலக்கோடு, 2, மாரண்டஹள்ளி, 6 என மாவட்டத்தில், 41 மி.மீ., மழை அளவு பதிவானது. அதை தொடர்ந்து, மிதமான சாரல் மழை மாவட்டம் முழுவதும் காலை முதல் மதியம், 12:00 மணி வரை பெய்தது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தர்மபுரி நகரில் பரபரப்பாக காணப்படும் பஸ் ஸ்டாண்ட், ஆறுமுக ஆச்சாரி தெரு, அப்துல் முஜீத் தெரு, நேதாஜி பைபாஸ் சாலை உள்ளிட்ட
பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன போக்குவரத்து நிறுத்தம்
தர்மபுரி, தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, மைசூருக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ், கார், லாரி, கண்டெய்னர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத்
துவங்கியது. இதனால், அதிகாலையில் கனரக வாகனங்கள் லாரிகள் நிறுத்துமிடம், பெட்ரோல் பங்க் மற்றும் திறந்த வெளி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினர். இதனால், தர்மபுரியில் வாகன போக்கு வரத்து கனிசமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.