/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி
/
பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி
பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி
பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி
ADDED : ஜூலை 07, 2025 03:47 AM
காரிமங்கலம்: மொரப்பூர் மேம்பாலம் அருகே, பைக் மீது லாரி மோதியதில், கணவன் கண்ணெதிரே மனைவி தலை நசுங்கி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன், 34. தனியார் பால் நிறுவன ஊழியர்.இவர் மனைவி சசிகலா, 28. நேற்று மாலை, 5:00 மணிக்கு முல்-லைவேந்தன் தன் ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் மனைவி சசிக-லாவை அழைத்துக்கொண்டு பொம்மனுார் செல்ல, காரிமங்கலம் நோக்கி வந்தார்.
மொரப்பூர் மேம்பாலம் அருகே, பின்னால் வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியதில், முல்லைவேந்தன், சசிகலா ஆகிய இரு-வரும் சாலையில் விழுந்தனர். இதில், சசிகலா லாரியின் சக்க-ரத்தில் சிக்கி, தலை நசுங்கி கணவன் கண்ணெதிரே பலியானார். காரிமங்கலம் போலீசார் சம்பவ இடம் சென்று, சசிகலா உடலை கைப்பற்றி விசாரித்து
வருகின்றனர்.