/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி
/
வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி
ADDED : அக் 03, 2024 01:31 AM
வன உயிரின வாரவிழா
மாணவர்கள் துாய்மை பணி
அரூர், அக். 3-
தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் சார்பில், மக்கள் மற்றும் கிரகத்தை இணைத்தல், வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல் என்ற கருப்பொருளுடன், 2024ம் ஆண்டிற்கான வன உயிரின வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், அரூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அரூர் முதல் சிந்தல்பாடி செல்லும் வனச்சாலையில், இருபுறமும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
வனவர்கள் விவேகானந்தன், சாக்கப்பன், வனக்காப்பாளர்கள் கவுரப்பன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.