/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

ADDED : மே 07, 2025 01:40 AM
அரூர்:அரூர், மொரப்பூர் பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க கட்டப்பட்ட பல சுகாதார வளாகங்கள், பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் மொரப்பூர் ஒன்றியத்தில், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை துாய்மை பாரத இயக்க திட்டத்தில், பல பஞ்.,களில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், பல சுகாதார வளாகங்கள் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டிக் கிடக்கிறது. பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகங்களில் சில, மின் மோட்டார் பழுது, செப்டிக் டேங்க் நிறைந்தும் சுத்தம் செய்யப்படாத நிலை, மின் விளக்கு வசதி இல்லாத நிலை போன்ற காரணங்களால் மூடப்பட்டுள்ளன.
மேலும், இந்த சுகாதார வளாகத்தைப் புதுப்பித்தல் பணி என்ற பெயரில் ஆண்டுதோறும் பல பஞ்.,களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படுவதாகவும் புகார் நிலவுகிறது. எனவே, பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறக்க, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.