/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 3.50 கோடி ஏமாற்றிய பெண் கைது
/
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 3.50 கோடி ஏமாற்றிய பெண் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 3.50 கோடி ஏமாற்றிய பெண் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 3.50 கோடி ஏமாற்றிய பெண் கைது
ADDED : ஜன 11, 2024 11:18 AM
தர்மபுரி: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 3.50 கோடி ரூபாய் ஏமாற்றிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பன்னிகுளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புனிதா, 40; இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் முருகன் இறந்ததை அடுத்து, புனிதா தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தர்மபுரியில் உள்ள வங்கிக்கு வந்து செல்லும் போது, அந்த வங்கி செயல்பட்டு வரும் இடத்தின் உரிமையாளர் ஜான், 45, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, புனிதாவுக்கு வங்கியில் ஜான் கடன் வாங்கி கொடுத்ததையடுத்து, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஜானுக்கும், புனிதாவுக்கும் பழக்கம் அதிகரித்தது. புனிதாவை திருமணம் செய்து கொள்ள ஜான் விருப்பம் தெரிவித்துள்ளார். புனிதாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் நம்பிக்கை ஏற்பட்டதால், புனிதா மகன்களுக்கு கல்லுாரி கட்டணம் வரை ஜான் செலுத்தி வந்துள்ளார். ஆனால் புனிதா, ஜானை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜான், தர்மபுரியில் தனது பெயரில் இருந்து வங்கி செயல்பட்ட இடத்தை விற்று, கோவை மாவட்டம் சரவணம்பட்டியில், ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார், 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை புனிதா தனது பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.
இந்த இடத்தை எழுதி வாங்கிய பின், ஜானை திருமணம் செய்யாமல், அவரை துரத்தி விட்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜான், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து குற்றப்
பிரிவு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் விசாரித்து வந்தார். விசாரணையில் ஜானை ஏமாற்றி புனிதா, 3 கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று
புனிதாவை போலீசார் கைது செய்தனர்.