UPDATED : அக் 20, 2026 04:39 AM
ADDED : அக் 20, 2026 02:31 AM

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அதிபதி. இவரது, மனைவி பேபி சர்ளா, 33; இவரது கணவர் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சாதிக்கா, 13 என்ற மகளும், பணி நிலவன், 7 என்ற மகனும் உள்ளனர். கடந்த, 9ம் தேதி மாலை தம்பதி இருவரும் வீட்டிலுள்ள மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்டவ் வெடித்ததில்
இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்தவர்கள், 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பேபி சர்ளா உயிரிழந்தார். அவரது தாய் முத்தம்மாள் கொடுத்த புகார் படி நேற்று, ஏரியூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
