/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டா கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
/
பட்டா கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
ADDED : டிச 18, 2024 01:42 AM
தர்மபுரி, டிச. 18-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் சாந்தியை, பெண்கள் முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்., நரசிபுரத்தில், 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில், 2 முதல், 3 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்.,ல் அருகிலுள்ள பஞ்.,களை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதில், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மனு அளிக்க அப்
பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த கலெக்டர் சாந்தியை நரசிபுரத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். பின்,
அருகிலுள்ள பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 198 பேருக்கு தங்களுடைய பஞ்.,ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. எங்கள் கிராமத்தில், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய பின், மீதமுள்ள இடத்தில், மற்றவர்களுக்கு பட்டா வழங்க, கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் சாந்தி அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். டி.ஆர்.ஓ., கவிதா மனு குறித்து பெண்களிடம் விசாரித்தார்.