ADDED : செப் 16, 2026 06:07 AM
அரூர்:அரூர் அருகே, மழை வேண்டி ஏரியில் பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடுநடத்தினர்.
தர்மபுரி
மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்டது உடையானுார். அரூர் -
தீர்த்தமலை சாலையில், அமைந்துள்ள இக்கிராமத்தில், மழை வேண்டி
தொடர்ந்து, 5 நாட்கள் பெண் கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர்.இது
குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது, நிலவும் கடும்
வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கும்
தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் கிடைக்காமல்,
மக்கள் அவதியடைகின்றனர். இதை கருத்தில் கொண்டும், மழை வேண்டியும்
கடந்த நான்கு நாட்களாக, இங்குள்ள ஏரியின் மையப்பகுதியில், இரவில்
பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இறுதி நாளான நேற்றிரவு
ஏரியில் களி, கருவாட்டு குழம்பு வைத்து படைக்கப்பட்டது. தொடர்ந்து
சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் வழிபட்டனர்.
இறுதியில், மக்களுக்கு களி, கருவாட்டு குழம்பு பிரசாதமாக
வழங்கப்பட்டது. கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் வறட்சி
ஏற்பட்ட போது, இதேபோல், வழிபாடு நடத்தினோம். இவ்வாறு, செய்தால் மழை
பெய்யும் என்பது ஐதீகம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
