/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது மாட்டு சாணத்தை ஊற்றிய பெண்கள்
/
பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது மாட்டு சாணத்தை ஊற்றிய பெண்கள்
பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது மாட்டு சாணத்தை ஊற்றிய பெண்கள்
பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது மாட்டு சாணத்தை ஊற்றிய பெண்கள்
ADDED : ஜன 05, 2024 10:40 AM
தொப்பூர்: நல்லம்பள்ளி அருகே, நில அளவீடு செய்ய பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது, அப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், மாட்டுச் சாணத்தை கரைத்து
ஊற்றினர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள், 50 என்பவருக்கு சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால், இவருக்கும், அருகிலுள்ள சாலம்மாளின் அக்கா முனியம்மாள், 60, என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை சர்வேயர் மூலம், முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய, தாசில்
தாரிடம் மனு அளித்தார்.
இதையடுத்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஹள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ், சர்வேயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை, அளவீடு செய்ய நேற்று சென்றனர். அந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும், கோபமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலம்மாள், அவருடன் வந்தவர்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த, எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது,
முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் ஆகியோர், கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்ய வந்த
சர்வேயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, முனியம்மாள் மற்றும் மாதம்மாளை தொப்பூர் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.