/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இலக்கியம்பட்டியில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 01, 2025 02:17 AM
தர்மபுரி;தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டி பஞ்., 15வது வார்டில் வெங்கடேசபெருமாள் கோவில் பகுதி யில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை தர்மபுரி பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் இலக்கியம்பட்டி பஞ்., செயலரிடம் புகார் மற்றும் கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வெங்கடேசபெருமாள் கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மறியலிலும் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். மேலும், நேற்று மாலைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தால், பெண்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.