ADDED : மார் 09, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் டவுன் பஞ்., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் இந்திராணி கேக் வெட்டி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
டவுன் பஞ்., துணைத் தலைவர் தனபால், கவுன்சிலர் முல்லைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். அரூர் அரசு மருத்துவமனையில் வி.சி., சார்பில், பெண்களுக்கு பழம், பிரட் வழங்கப்பட்டது. அரூர் அரசு கல்லுாரி உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

