/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயி கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்
/
விவசாயி கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : ஜன 09, 2026 07:21 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஆணைக்கல்லானுாரை சேர்ந்த விவசாயி அன்பழகன், 40. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி மாதையன், 63 என்பவருக்கும், மரத்தில் புளியம் பழம் பறிப்பது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த, 1997 பிப்ரவரி மாதம் மாதையன் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சென்று, வீட்டிலிருந்த அன்பழகனை தாக்கியதுடன், அவருடைய வீட்டையும் சேதப்படுத்தினார். இதில் படுகாயமடைந்த அன்பழகன் உயிரிழந்தார். பென்னாகரம் போலீசார், மாதையனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால், மாதையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகினார்.

