ADDED : செப் 01, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
நல்லம்பள்ளி; சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த காளேகவுண்-டனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜவேலு, 56. இவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சமத்துவபுரத்தில் தங்கி, கூலிவேலை செய்து வந்தார்.
நேற்று மதியம், 1:00 மணிக்கு ராஜவேலு பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் ராஜவேல் மீது மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
