தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி


ADDED : மே 06, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி அனுசியாதேவி, 36. இவர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார்.

கடந்த, 3 காலை தன்னுடைய ஸ்கூட்டியில் பணிக்கு சென்றார். பள்ளிப்பட்டி சுகர் மில் ரோட்டில் அம்மாபாளையம் பாலம் அருகேசென்றபோது எதிராக தோழனூர் பகுதியை சேர்ந்த மாதையன், 30, அவரது பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் பின்னால் ராஜா,55, என்பவரை உட்கார வைத்துக்கொண்டு, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டி வந்து அனுசியாதேவி மீது மோதினார். இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜா,55, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

**************************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us