ADDED : ஜூன் 20, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்தவர் வைரப்பன், 60, கூலித்தொழிலாளி; இவர், அரூரை சேர்ந்த மேஸ்திரி முத்து என்பவரிடம், கூலி வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த, 17 காலை, 7:30 மணிக்கு மேல்பாட்சாபேட்டையை சேர்ந்த தங்கம் என்பவரின் வீட்டில், வேலை செய்து கொண்டிருந்தபோது சுவர் இடிந்து வைரப்பன் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்றுஉயிரிழந்தார்.அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
