ADDED : செப் 06, 2026 04:50 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியை சேர்ந்-தவர் பழனி, 65, கூலித்தொழிலாளி; இவரும், கோணம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, கம்மாளம்பட்டி வேடியப்பன், முருகன், தேவராஜ் ஆகிய, 5 பேரும் நேற்று உடையானுாரை சேர்ந்த வேடி-யப்பன் என்பவரின் விவசாய கிணற்றை வெட்டும் பணியில் ஈடு-பட்டனர்.
மதியம், 12:15 மணிக்கு திடீரென கிணற்றின் சுவர் இடிந்து, பழனி தலை மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். அங்-கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனியை பரிசோதித்த மருத்து-வர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். அரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
