ADDED : ஆக 25, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தண்டுக்காரம்பட்-டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தன், 60. இவர் மனைவி அலமேலு, 55. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கோவிந்தன் நேற்று மதியம், 12:30 மணிக்கு மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டபோது அவரை, அலமேலு கீழே தள்ளி விட்-டுள்ளார்.
இதில், தலையில் காயமடைந்த கோவிந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றினர். தர்மபுரி டி.எஸ்.பி.,சிவராமன், தொப்பூர் இன்ஸ்-பெக்டர் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டனர். சம்ப-வத்தை, கொலை வழக்காக பதிவு செய்து, அலமேலுவை போலீசார் கைது செய்தனர்.