/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பட்டறை
/
ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பட்டறை
ADDED : பிப் 10, 2025 01:36 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பில், தேசிய அளவிலான சொற்பொழிவு பயிற்சி பட்டறை, 'இலக்கியமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் நேற்று நடந்தது.
இதில், கர்நாடகா மாநில அக்கமகாதேவி மகளிர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் கண்ணன், தர்மபுரி மாவட்ட ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் நாகராஜன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பூபதி ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.இதில், தனியார் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ), மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கிருத்திகா நன்றி கூறினார்.