/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இ.ஆர்.கே., கல்வி நிறுவனத்தில் உலக வன நாள் கொண்டாட்டம்
/
இ.ஆர்.கே., கல்வி நிறுவனத்தில் உலக வன நாள் கொண்டாட்டம்
இ.ஆர்.கே., கல்வி நிறுவனத்தில் உலக வன நாள் கொண்டாட்டம்
இ.ஆர்.கே., கல்வி நிறுவனத்தில் உலக வன நாள் கொண்டாட்டம்
ADDED : மார் 25, 2024 07:16 AM
அரூர் : அரூர் அடுத்த எருமியாம்பட்டியிலுள்ள இ.ஆர்.கே., கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு வனத்துறை, தர்மபுரி மாவட்ட அரூர் வனக்கோட்டம் இணைந்து நடத்திய, உலக வன நாள் மற்றும் மரக்கன்று நடு விழா கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.
இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சக்தி தலைமை வகித்தார். ஆங்கில துறைத்தலைவர் ரோபினா வரவேற்றார்.
அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் பேசுகையில், ''மரங்களை காப்பதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். பல்வேறு ஆடம்பர தேவைகளுக்காக மரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வனவிலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் தான் பாதிப்பு என்பதை நாம் உணருவதில்லை,'' என்றார்.
விழாவில், மருந்தியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பள்ளிப்பட்டி வனவர் சையத்காபர், அரூர் வனவர் ரகுமணி, சித்தேரி வனவர் அசோகன், நிர்வாக அலுவலர் அருள்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வனங்களின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்துறை தலைவர் பெருமாள் நன்றி கூறினார். விழாவை தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

