ADDED : மார் 22, 2026 07:04 AM

பாலக்கோடு:பாலக்கோடு அருகே, மேக்லாம்பட்டி ஏரிக்கரையில், உலக வன தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில், மரக்கன்றுகள் நட்டனர்.
காடுகளின்
முக்கியத்துவம், மரங்களின் நன்மைகள் மற்றும் சுற்-றுச்சூழலை
பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஐக்-கிய நாடுகள்
சபையால், மார்ச், 21ஐ உலக வன தினமாக, 2012-ல் அறிவிக்கப்பட்டது.
இந்நாளில் காடுகளை வளர்க்கவும், பாது-காக்கவும் மரக்கன்றுகள் நடுதல்
போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்ப-டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக வன தினம்
மார்ச், 21 அன்று கொண்டாடப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம்,
பாலக்கோடு வனச்சரகம் சார்பில், கடமடை பஞ்.,க்கு உட்பட்ட
மேக்லாம்-பட்டி ஏரிக்கரையில், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன்
தலை-மையில், ஆலம், அரசன், நாவல், மூங்கில் ஆகிய மரக்கன்றுகள் நட்டு
வைத்தனர். இதில், வன பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து
கொண்டனர்
