/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நவராத்திரி 5ம் நாள் விழா அம்மன் கோவில்களில் வழிபாடு
/
நவராத்திரி 5ம் நாள் விழா அம்மன் கோவில்களில் வழிபாடு
நவராத்திரி 5ம் நாள் விழா அம்மன் கோவில்களில் வழிபாடு
நவராத்திரி 5ம் நாள் விழா அம்மன் கோவில்களில் வழிபாடு
ADDED : செப் 27, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, நவராத்திரி விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவில், ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார்.
நவராத்திரி விழாவில், 5ம் நாளான நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் லட்சுமி அலங்காரத்திலும், கொளகத்துார் பச்சையம்மன், 108 புடவை அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.