/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
/
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED : டிச 15, 2024 01:26 AM
தர்மபுரி, டிச. 15-
கார்த்திகை தீபத் திருவிழாவின், இரண்டாவது நாளான நேற்று விஷ்ணு தீபத்தையொட்டி, தர்மபுரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தர்மபுரி, வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடந்த வழிபாட்டில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றியபின், நேற்று இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
அதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், வரதகுப்பம் வெங்கட்ரமண கோவில், அதகபாடி லட்சுமி நாராயணர் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண கோவில், அக்கமனஹள்ளி ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.