ADDED : ஆக 13, 2026 03:08 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர். மேலும், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் பகுதியில் உள்ள பெருமாள், நல்லியம்மன் உள்ளிட்ட குலதெய்வ கோவில்களுக்கு சென்ற குடியார்கள் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை செய்து வழிபட்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி -அரூர் சாலையில் கதி-ரிபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடந்தது. பையர்நத்தம் அடுத்த கவரமலை மலை அடிவாரத்தில் பொம்மிடி -அரூர் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயர் மற்றும் பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு அபி-ஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடந்தது.
