/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு
/
கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு
கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு
கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு
ADDED : அக் 11, 2025 12:26 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்டத்தில் இன்று, (அக்.,11) முற்பகல் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு, 1,829 தேர்வர்களுக்கு, இரு தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரி, நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய தேர்வு மையங்களுக்கு, தேர்வர்கள் எளிதாக செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு உதவி மையம் தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு அவசர தேவைகள் ஏற்படின். இணைப்பதிவாளர் அலுவலகத்தின் உதவி மைய எண்ணை (04342-233803) தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்களின் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன் மற்றும் புளுடூத் உள்ளிட்ட மின்னனு சாதனங்கள் எதுவும் எடுத்து வர வேண்டாம். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் கட்டாயம் வர வேண்டும்.
இத்தகவலை, தர்மபுரி மாவட்ட இணைப்பதிவாளர் ( ஆள்சேர்ப்பு நிலையம்) தெ