/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் முன் இருதரப்பினர் மோதல்
/
ஏரியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் முன் இருதரப்பினர் மோதல்
ஏரியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் முன் இருதரப்பினர் மோதல்
ஏரியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் முன் இருதரப்பினர் மோதல்
ADDED : செப் 22, 2024 05:30 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், சுஞ்சல்நத்தம் பஞ்., உட்பட்ட எம்.தண்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 30. இவர், பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த பிரியா, 23, என்பவருக்கும் கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு, 5 வயதில் மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசன் அடிக்கடி மது போதையில் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், பிரியா தன் கணவர் மீது, ஏரியூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து, இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். நேற்று முன்தினம், வெங்கடேசன் மது போதையில், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் பிரியாவின் கையில் கிழித்துள்ளார். பின், பாலக்கோட்டிலுள்ள பிரியா வீட்டுக்கு போன் செய்து, உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் தெரிவித்துள்ளார். பிரியாவின் உறவினர்கள் வருவதற்குள் அடக்கம் செய்ய, வெங்கடேசன் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு வந்த உறவினர்கள், பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், வெங்கடேசன், அவரின் உறவினர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் கூறி ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். நேற்று, தர்மபுரி ஆர்.டி.ஓ. காயத்திரி பென்னாகரம் தலைமை மருத்துவமனையில் விசாரணை செய்தார். அப்போது, வெங்கடேசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று பிரியாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், போலீசாரின் முன்னிலையிலேயே இருதரப்பினரும், மோதிக்கொண்டதால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளியில்
நல்விருந்து
பாப்பிரெட்டிப்பட்டி---
கடத்துார் ஒன்றியம் நல்லகுட்லஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் நல் விருந்து வழங்கும் நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் சென்னகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் பள்ளியில் படிக்கும், 220 மாணவர்களுக்கும், இனிப்புடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடத்துார் வட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னசாமி, ஆசிரியர்கள் வேல்முருகன், கார்த்திகேயன், உமா சங்கரி, சண்முகப்பிரியா, ரமணி கோவிந்தராஜ், ரமேஷ் செல்வரரூபிணி, சாரதா, அமைப்பாளர் கலைச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.