/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
/
தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
ADDED : ஆக 23, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அலமேலுபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31. இவர் சமத்துவபுரம் சிக்கன் ரைஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் கடை விடுமுறை என்பதால், சமத்துவபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு வரிசையில் நின்றிருந்த நொனங்கனுாரை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவரின் தோள் மீது கை போட்டதால் கோபமடைந்த பிரகாஷ், ராஜே ைஷ மது பாட்டிலால் குத்தியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.