ADDED : டிச 28, 2024 02:45 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் காந்திநகர், 4 வது தெருவை சேர்ந்த கவுசல்யா, 27. இவர் தனியார் நர்சிங் கல்லுாரி விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 23 இரவு அவருடைய ஹோண்டா டியோ ஸ்கூட்டரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு சென்றவர். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது காணவில்லை. இது குறித்து, தர்மபுரி டவுன் போலீசில் அளித்த புகார் படி, வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஆனந்த், 27, ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து, விசாரித்ததில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பஜாஜ் பல்சர் பைக்கை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட ஆனந்தை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.