ADDED : அக் 21, 2025 01:10 AM
அதியமான்கோட்டை, சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த, கொல்லம்பட்டியை சேர்ந்த விஷ்ணு, 27. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விஷ்ணுவின் நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதிராஜ்,25, என்பவருக்கு சொந்தமான பஜாஜ் பல்சர் பைக்கில், கடந்த, 19 அன்று தீபாவளி பண்டிகைக்காக, ஓசூரில் இருந்து சங்ககிரி நோக்கி, கிருஷ்ணகிரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், புறவடை அருகே மாலை, 3:45 மணிக்கு வந்தபோது, முன்னாள் சாலையோரம் நின்றிருந்த காரின் கண்ணாடியில் உரசியதால் நிலைதடுமாறி, பூபதிராஜ், விஷ்ணு ஆகிய இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மகிந்திரா பிக்கப் சரக்கு வாகனம் விஷ்ணுவின் வயிற்றின் மீது ஏறியது. பலத்த காயமடைந்தவரை மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷ்ணு இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.