தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கார் கவிழ்ந்து வாலிபர் பலி

கார் கவிழ்ந்து வாலிபர் பலி

கார் கவிழ்ந்து வாலிபர் பலி


ADDED : ஜூலை 10, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 7 பேர், கேரளா மாநிலம், மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு திரும்பினர்.

அவர்கள் சென்ற கார், தர்மபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில், இரவு, 10:30 மணிக்கு செல்லியம்பட்டி பகுதியில் சாலையில் கவிழ்ந்தது. இதில், காரிலிருந்த, 7 பேரும் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சையத் ஷெரீப், 18, என்ற வாலிபர் உயிரிழந்தார். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us