ADDED : டிச 14, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், டிச. 14--
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ், 28; பரமத்தியில் பழக்கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, தேசிய நெடுஞ்சாலையில், டூவீலரில் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து புகார்படி, உத்தர
பிரதேச மாநிலம், நர்க்கலா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அஜய்சிங், 32, என்பவரை கைது செய்த, ப.வேலுார் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.