sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குளம் சீரமைப்பு பணி தாமதம் மழை நீர் வீணாகும் அபாயம்

/

குளம் சீரமைப்பு பணி தாமதம் மழை நீர் வீணாகும் அபாயம்

குளம் சீரமைப்பு பணி தாமதம் மழை நீர் வீணாகும் அபாயம்

குளம் சீரமைப்பு பணி தாமதம் மழை நீர் வீணாகும் அபாயம்


ADDED : ஆக 30, 2011 02:28 AM

Google News

ADDED : ஆக 30, 2011 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே குருவப்பநாயக்கன்குளத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் கோமதிநாயகம், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.விவாதம் வருமாறு:

பிரபுமுனிசாமி: சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குருவப்பநாயக்கன்குளத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியும், மதகு செப்பனிடும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை காலம் துவங்கி விட்டால், மழை நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்படும். மழைநீர் விளைநிலங்கள், குடியிருப்புகளுக்குள் புகும் ஆபத்து உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோமதிநாயகம் (பி.டி.ஓ.,): பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் முடிக்கப்படும்.

சாலமோன்: நரசிங்கபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மெயின் குழாயில் நேரடியாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், பிற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை முறைப்படுத்தவேண்டும்.

இதையடுத்து சிமென்ட் ரோடு, குடிநீர் தொட்டி, போர்வெல், குடிநீர், பழைய குடியிருப்பை சீரமைப்பது உட்பட 35 பணிகளுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை வார்டு வாரியாக கவுன்சிலர்கள் தேர்வு செய்துகொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.








      Dinamalar
      Follow us