/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்
/
விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்
ADDED : ஆக 13, 2011 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலூர் சீரங்ககவுண்டனூரில், வெள்ளத்தால் நில அரிப்பு ஏற்பட்ட பகுதியில், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
சித்துவார்பட்டி ஊராட்சி சீரங்ககவுண்டனூர் வழி, மாங்கோம்பை காட்டாறு செல்கிறது.
கடந்த 2005 ல், கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலம் அரிக்கப்பட்டது. இங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, கிராமத்தினர் கோரி வருகின்றனர். நிலம் அரிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், சுவர் கட்டி தரவில்லை. ஊராட்சி தலைவர் ரங்கராஜ் கூறுகையில், ''தடுப்புச்சுவருக்கு அதிக நிதி தேவை. ஊராட்சி ஒன்றியம், வேறு துறைகள் மூலம் தான் பணி செய்ய வேண்டும்,'' என்றார்.