sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை :அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

/

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை :அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை :அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை :அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி


ADDED : அக் 07, 2011 12:01 AM

Google News

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : ''நிர்வாகச் சீர்க்கேட்டில் சிக்கித் தவிக்கும் நகராட்சியையும், பொதுமக்களையும் மீட்க உழைப்பேன்'' என, கொடைக்கானல் நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., வேட்பாளர் வி.எஸ்.கோவிந்தன் கூறினார்.

அண்ணாசாலை, பாம்பார்புரம் , ஆனந்தகிரி பகுதியில் அவர் பேசியது: முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் களைய பாடுபடுவேன். ஐந்து ஆண்டுகளாக நகராட்சியில் நிலவிய நிர்வாக சீர்கேட்டை களைவேன். குடிநீர் பிரச்னையை ஆராய்ந்து, வருங்காலங்களில் இது போன்ற அவலம் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆவண செய்யப்படும். நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் சுகாதாரம் முழுமையாக பாதுகாக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புதிதாக கழிப்பறை, தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கப்படும். ஆளும்கட்சியாக இருப்பதால், முதல்வரை சந்தித்து அதிக நிதிபெற்றும், அரசு அறிவித்த பசுமை குடில் வீடுகட்டும் திட்டம், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுவேன்.சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலா வழிகாட்டுவோர், ஓட்டுனர், சுற்றுலாவை நம்பியிருக்கும் வியாபாரிகள், வர்த்தகர்கள், கட்டுனர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். மலைப்பகுதியில் 'மாஸ்டர் பிளான்' விதிமுறைகளை மாற்றியமைக்க, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பேன். குறைதீர்க்கும் மையம் ஆரம்பிக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, நகராட்சியில் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சலவைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, துணி துவைக்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us