தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்

மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்

மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்


ADDED : ஜூன் 13, 2011 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2011 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : ''மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு அவசியம்,'' என ஒட்டன்சத்திரம் வோளண்மை உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதியில் 60 சதவீத வேளாண் மை நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, பயறு வகைகள் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கோடை உழவும் முக்கிய தொழில் நுட்பமாக உள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ல் செய்யப்படும் கோடை உழவானது அடுத்து பெறப்படும் மழை நீரை ஈர்த்து சேமித்து, விதைக்கபடும் பயிர்கள் வளர்வதற்கு பேருதவியாக அமைகிறது. மேலும் பயிர்களை தாக்கக்கூடிய மண்ணில் தங்கியுள்ள பூச்சிகளின் புழுக்கூடுகளும் உழவு செய்யும் போது வெளியே கொண்டு வரப்பட்டு அவை அழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் விதைக்கக் கூடிய பயிர்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் இல்லாமல் ஆரோக்கியமா செழித்து வளர முடிகிறது. எனவே விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும். கோடை வெப்பத்தின் பலனை முழுமையாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற சட்டிக்கலப்பைகள் கொண்டு ஒரு முறையும், சாதாரண கலப்பைகள் கொண்டு இருமுறையும் உழவேண்டும், என்றார்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us