/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிப்பிடமாக மாறும் எம்.எல்.ஏ., அலுவலகம்
/
கழிப்பிடமாக மாறும் எம்.எல்.ஏ., அலுவலகம்
ADDED : ஜூலை 15, 2011 10:16 PM
செம்பட்டி : செம்பட்டியில், தி.மு.க., மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியின், எம்.
எல்.ஏ., அலுவலக வளா கம் கழிப்பிடமாக மாறி உள்ளது. ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகே இந்த அலுவலகம் உள்ளது. பெரியசாமி அமைச்சராக இருந்தபோது, இங்கு தொண்டர்கள் நடமாட்டம் அதிகம். தற்போது எப்போதாவது அலுவலகத்திற்கு மாஜி வந்து செல்கிறார். மெயின்ரோட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள அலுவலகம் வரை இருபுறமும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றமாக உள் ளது. போதாக்குறைக்கு அலுவலக வளாகத்தை மலம் கழிக்கும் மையமாக மாற்றியுள்ளனர். இரவில் 'குடி'மகன்கள் குடித்து விட்டு கும்மாளம் அடிக்கின்றனர். பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகளை வளாகத்தை சுற்றிலும் வீசி செல்கின்றனர். இதனால், இப்பகுதி குப்பை மேடாகி வருகிறது. அலுவலக ஊழியர்கள், ஆத்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கே இந்த கதி என்றால், பாரம மக்களின் சுகாதார வசதிகளை, ஆத்தூர் ஊராட்சியினர் செய்து கொடுப்பார்களா? என்பது சந்தேகம் தான்.

