sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிராமத்திற்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்

கிராமத்திற்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்

கிராமத்திற்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்


ADDED : நவ 25, 2011 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2011 11:56 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:'கிராம பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர மறுப்பதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது,' என, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், புகார் தெரிவிக்கப்பட்டது.தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ., நாகராஜன், துணைத் தலைவர் பொன்னுத்துரை முன்னிலை வகித்தனர். உதவி மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்.

விவாதங்கள்:பொன்னுத்துரை: கூட்டத்திற்கு வர, மேல்மலை, கீழ்மலைப்பகுதியில் வாகன வசதி செய்ய வேண்டும். மற்ற துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியும், கூட்டத்தை புறக்கணிக்கின்றனர்.பி.டி.ஓ.,: அதிகாரிகள் புறக்கணிப்பு குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்படும்.



தவசி: ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. உபகரணங்கள் இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.தங்கராசு: கே.சி.பட்டி, பாச்சலூர், பெரியூர் பகுதியில் ரோடு, பூதமலையில் குடிநீர் வசதி செய்ய வேண்டும்பி.டி.ஓ.,: குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நூர்முகமது: கடன்மராவு உட்பட கிராம பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் வருவதில்லை. வந்தாலும் மதியம் 3 மணிக்கே கிளம்பி விடுகின்றனர்.பி.டி.ஓ.,: அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.'குஷி' பி.டி.ஓ.,: கூட்டம் துவங்கியவுடன், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திடீரென எழுந்த பி.டி.ஓ., நாகராஜன், ''இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என, ஐந்து நிமிடம் வரை, பாடல் பாடினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us