ADDED : ஜூன் 29, 2024 04:53 AM

அ நிறம் | அளவு
வேடசந்தூர் : அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்த புதிய அதிகாரிகளை நியமிக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வேடசந்துார் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சரவணன், மாநில செயலாளர் வீரகடம்புகோபு முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் ஸ்டாலின் வேளாங்கண்ணி நன்றி கூறினார்.
