/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சர்ச்களில் புனித வியாழன் பாதம் கழுவும் வழிபாடு
/
சர்ச்களில் புனித வியாழன் பாதம் கழுவும் வழிபாடு
ADDED : மார் 29, 2024 06:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மணிக்கூண்டில் உள்ள துாய வளனார் சர்ச்சில் புனித வியாழனையொட்டி கிறிஸ்தவ பாதிரியார்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெருசலேமில் தங்கியிருந்த ஏசுநாதர் சிலுவைப்பாட்டிற்கு முன்பாக தனது சீடர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் பாதங்களை கழுவி, துடைத்து முத்தமிட்டதாக பைபிள் புதிய ஏற்பாடு நுாலில் குறிப்பிட பட்டுள்ளது. இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் புனித வியாழன் விழா கடைபிடிக்க பட்டு வருகிறது. திண்டுக்கல் மணிக்கூண்டில் உள்ள துாய வளனார் சர்ச்சில் நடந்த பாதம் கழுவும் வழிபாட்டு நிகழ்ச்சியில் எளியவர்கள் பாதங்களை ஆயர் அந்தோணி பாப்புசாமி கழுவி துணியால் துடைத்து முத்தமிட்டார். இதை தொடர்ந்து பாதிரியார்கள் டோமினிக் சேவியர், அந்தோணி சாமி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிறப்பு திருப்பலிக்கு பின் இரவு முழுவதும் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை மறைமாவட்ட அதிபர் மரிய இஞ்ஞாசி செய்தார். இது போல் மாவட்டம் முழுவதும் உள்ள சர்ச்களில் இந்நிகழ்ச்சி நடந்தது.

