ADDED : ஜூலை 11, 2011 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஸ்ரீராம் ஐ.டி.ஐ.,சென்னை எல் அண்ட் டி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
வத்தலக்குண்டு ஸ்ரீராம்,திண்டுக்கல் லசால் புதுமணம்,ஸ்ரீகற்பக விநாயகா, நிலக்கோட்டை நாவலர் ஐ.டி.ஐ.,களிலிருந்து மின்சாரவியல் மாணவர்கள் பங்கேற்றனர். எல் அண்ட் டி மேலாளர் சிவகுமார், மனித வள மேம்பாட்டு அலுவலர் மகேந்திரன், ஸ்ரீராம் ஐ.டி.ஐ., தாளாளர் சகிலாபுகழேந்தி,முதல்வர் சிவகொழுந்து,துணை முதல்வர் ராமு,வேலைவாய்ப்பு துறை அலுவலர் பிரேம்குமார்,மனித வள மேம்பாட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன்,மின்சாரவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர்.