நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சங்க தலைவர் துளசி தலைமை வகித்தார்.
செயலாளர் எத்திராஜ் வரவேற்றார். கலெக்டர் நாகராஜன் மரக்கன்றுகளை நட்டார். சந்திரசேகரன் எஸ்.பி., நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, லயன்ஸ் சங்க மண்டல தலைவர் நடேஷ்பாபு, தலைமை ஆசிரியர் காளிமுத்து பங்கேற்றனர். லயன்ஸ் சங்க பொருளாளர் துருவன் நன்றி கூறினார். கால்நடை மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

