/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிமென்ட் ஆலை லாரிகள் சிறை பிடிப்பு
/
சிமென்ட் ஆலை லாரிகள் சிறை பிடிப்பு
ADDED : ஏப் 27, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: டி.கூடலுார் பகுதியில் தனியார் சிமென்ட் ஆலை செயல்படுகிறது.
இதற்கு தேவையான மூலப்பொருட்கள் பாளையம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து சரக்கு ரயில்களில் கொண்டு வருகின்றனர். இதை லாரிகளில் கொட்டி கொண்டு செல்வதால் துாசி படிகிறது. இதனால் ஆடு ,மாடுகள் புற்களை மேய முடியாமல் தவிப்பதோடு ஆடுகள் இறக்கின்றன . பாதித்த மக்கள் ரோடுகளில் கல் , டூவீலர்களை நிறுத்தி லாரிகளை சிறைபிடித்துள்ளனர். குஜிலியம்பாறை போலீசாரிடம் கேட்டபோது விசாரிக்கிறோம் என்றனர்.

