ADDED : ஜூலை 30, 2024 05:51 AM

ஆர்ப்பாட்டம்
பழநி :பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பழநி தலைமை தபால் நிலையம் முன்பு காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் மாரிக்கண்ணு தலைமை வகித்தார்.
............
மக்களுடன் முதல்வர் முகாம்
நத்தம்: ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அரசு திருமண மண்டப வளாகத்தில் வேலம்பட்டி, புன்னப்பட்டி, முளையூர், பண்ணுவார்பட்டி , புதுப்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மண்டல அலுவலர் வீரராகவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடபதி முன்னிலை வகித்தனர். தாசில்தார் சுந்தரபாண்டியன் வரவேற்றார். 639 மனுக்கள் பெறப்பட்டது. துணை தாசில்தார் பிரேம்குமார், தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயபிரகாஷ்,வேலுச்சாமி, பழனியம்மாள் மகாலிங்கம் கலந்து கொண்டனர்.
..........
...........
பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: இன சுழற்சி மூறையாக பணியமர்த்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் பழநி ரோடு மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரக்குமார்,பொருளாளர் ஜான்சன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலன்,மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.
............
பேரூராட்சி கூட்டம்
நத்தம்: நத்தத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார்.துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன்,தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ரா மேரி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் இ.பி., காலனியில் புதிய போர்வேல் அமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.