/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அமைச்சர் சக்கரபாணி இறுதி கட்ட பிரசாரம்
/
அமைச்சர் சக்கரபாணி இறுதி கட்ட பிரசாரம்
ADDED : ஏப் 18, 2024 05:40 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் திண்டுக்கல் தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் இந்தியாவிலே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மோகன், தொகுதி பொறுப்பாளர் ஜான், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், துணைச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், நகர அவை தலைவர் சோமசுந்தரம், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சிவமணி, ம.தி.மு.க., நிர்வாகி தமிழ் வேந்தன் கலந்து கொண்டனர்.

