/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதார் புதுப்பித்தலுக்காக ஊரக பகுதியினர் பரிதவிப்பு: நகர் பகுதி மையங்களுக்கும் அலைக்கழிப்பு
/
ஆதார் புதுப்பித்தலுக்காக ஊரக பகுதியினர் பரிதவிப்பு: நகர் பகுதி மையங்களுக்கும் அலைக்கழிப்பு
ஆதார் புதுப்பித்தலுக்காக ஊரக பகுதியினர் பரிதவிப்பு: நகர் பகுதி மையங்களுக்கும் அலைக்கழிப்பு
ஆதார் புதுப்பித்தலுக்காக ஊரக பகுதியினர் பரிதவிப்பு: நகர் பகுதி மையங்களுக்கும் அலைக்கழிப்பு
ADDED : பிப் 28, 2025 06:33 AM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுவயதில் ஆதார் கார்டு பெற்றவர்கள் தற்போது புதுப்பித்தல் பணிக்காக நீண்ட துாரம் பயணித்து குறிப்பிட்ட நகர் பகுதி மையங்களில் வரிசையில் காத்திருந்து ஒரு நாளை வீணாடிக்கும் நிலை உள்ளது.
2012ல் அப்போதிருந்த காங்., கூட்டணி மத்திய அரசு இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்க முடிவு செய்தது. இதன்படி ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் வழங்கப்பட்டு அவர்களது கைரேகை, கண் விழி போன்றவை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவரது வங்கி கணக்கு, காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பள்ளி படிப்பு என பல விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒருவருக்கே பல ஊர்களில் ஓட்டுகள் இருப்பதை தடுக்க முடியும். கருப்பு பணம், வரி ஏய்ப்பு போன்றவற்றை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுகிறது. இதன் மூலம் ஒருவரே அரசை ஏமாற்றி அதிக மானியம், சலுகைகளை பெறுவதை தடுக்க முடியும். உதாரணமாக தமிழகத்தில் சமீபத்தில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை குறிப்பிடலாம். இதில் பலரும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் 5 பவுனுக்கு உள்ளாக, அதே நேரம் பல வேறு வங்கிகளிலும், மாவட்டங்களை கடந்தும் நகைகளை அடமானம் வைத்து அதிகபட்சமாக தள்ளுபடிக்காக காத்திருந்தனர். ஆனால் ஆதார் விபரங்கள் மூலம் பகுத்தாய்வு செய்த போது ஏராளமானோர் 5 பவுனுக்கு அதிகமாக நகை அடமானம் வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதுபோன்ற நகைக்கடன்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் அரசின் தள்ளுபடி தொகை வெகுவாக குறைந்தது குறிப்பிடதக்கது.
ஆதார் திட்டம் அமலான 2013ல் சிறுவயதில் அட்டை பெற்றவர்கள் தற்போது 15 வயதை கடந்திருப்பதால் புதுப்பிக்க வேண்டியுள்ளது. புதுப்பித்தல் பணியை செய்யாவிடில் ஆதார் எண் செல்லாததாக மாறிவிடும். இதற்கான எஸ்.எம்.எஸ்., அறிவிப்புகளை ஆதார் நிறுவனம் அனுப்பி வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் கலெக்டர், தாலுகா அலுவலகங்களிலும் சில முன்னணி வங்கிகளில் பிரதான கிளைகள், தபால் அலுவலகங்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.
ஊரகப் பகுதி தபால் நிலையங்களில் அவர்களின் அன்றாட அலுவல் பணி காரணமாக ஒரு நாளைக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கை ஆதார் பணி புதுப்பித்தலுக்கு மட்டுமே முன் வருகின்றனர். இதனால் ஆதார் புதுப்பித்தல் பணிக்கு நீண்ட காலம் காத்திருக்கும் நிலையால் தவிக்கின்றனர்.

