ADDED : ஆக 26, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:
நத்தம் அருகே ஊராளிபட்டி பகுதியில் திண்டுக்கல் மண்டல புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.
இயந்திரங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி நத்தம் போலீசார் பூமி 28,அசோக்குமார் 32, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

